Friday, 15 December 2017

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழாவில் மருது வரலாறு மீட்பு குழுவின் நிகழ்ச்சிகள்

அகமுடையார் பேரினத்தின் வரலாற்றிலே 268 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக இன்று மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழா மருது வரலாறு மீட்புகுழு சார்பில் கொண்டாடப்பட்டது ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார் மாமன்னர் பெரிய மருது பாண்டியர்...!!! 

பார்வையற்ற பள்ளி குழந்தைகளுக்கு அன்னதான விழா நடைபெற்றது...!!! 

சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்த அகமுடையார் வழித்தோன்றல் சாத்தப்பன் ஞானியார்...!!! 

வழக்கம் போல சாத்தப்பன் ஞானியார் சிலைக்கு மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! 

காளையார் கோவில் முன்பு கூடியிருந்த மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்கள்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழாவில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் பெரிய மருது பாண்டியர் திருஉருவ சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரை அலங்கரிக்க காத்திருந்த பூஜை பொருள்கள்...!!!  

அபிஷேகம் நிறைவடைந்து மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது பாண்டியர் அபிஷேக ஆராதனையை காண வந்திருந்த மருது வரலாறு மீட்பு இளைஞர்கள்...!!! 

நிகழ்ச்சியின் முடிவில்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியர் பிறந்த நாள் விழாவில் அடுத்த கட்டமாக முத்தூர் அரண்மனையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்களுடன் மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மனைவி கருப்பாயி ஆத்தாளின் முத்தூர் அரண்மனையில்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் பிறந்த நாள் விழாவில் இறுதியாக திருப்பத்தூர் நினைவிடத்தில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி வந்தோம்...!!! 

திருப்பத்தூர் நினைவிடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் மருது பாண்டியர்களின் திருப்பத்தூர் வாரிசுதார்கள் சார்பில் 269 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது...!!! 


அந்த வேலையில் அவர்கள் கூறியது (இத்தனை காலம் மருது பாண்டியர்கள் பிறந்த நாளை மறந்து வாழ்ந்தோம் இன்று உங்களால் (மருது வரலாறு மீட்புகுழுவால்) தான் இந்த செய்தி தெரிந்தது இனி வரும் காலங்களிலும் கட்டாயம் வணங்குவோம் என்றனர்...!!!

இத்தனை காலம் நமது வரலாற்றை மறந்து வாழ்ந்தது போதும் இனியாவது விழித்தெழுவோம் இன்று நாம் தூவிய சிறு விதைகள் வருங்காலத்தில் விருட்சமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையில் நமது பயணம்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

Friday, 8 December 2017

இரத்தத்தில் கையெழுத்திட்டு நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் போர் புரிந்த ஜெயராமன் முதலியார் அகமுடையார்

மாவீரர் ஜெயராமன் முதலியார் (அகமுடையார்) 

நாட்டிற்க்கு உழைத்த விடுதலை வீரர் என்ற விருதை ஜெயராமன் முதலியாருக்கு APJ அப்துல்கலாம் வழங்கிய போது 

ஹிட்லர் அளித்த THE ITALY STAR  விருது 

மத்திய அரசு அளித்த தாமரை பட்டயம் 

மாநில அரசு அளித்த தாமரை பட்டம் 

ஜெயராமன் முதலியார் அகமுடையாரின் முழு தகவல் படிவம் மற்றும் அவர் வகித்த பதவிகள் 


போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் ஜெயராமன் முதலியார் அவர்கள் வேலூர் உசூர் பகுதியில் 21.3.1921 ம் வருடத்தில் பிறந்தார் இவர் தனது இளம் வயதிலேயே ஐ.என்.ஏ எனும் இந்திய தேசிய ராணுவப் படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தனது 13 வயதில் அணைக்கட்டு பகுதியில் மவுண்ட் என்ற பள்ளியில் படித்து வந்தார் அந்த நேரத்தில் அப்பகுதியில் தேசிய பற்றாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காந்தி பற்றிய பாடல்களை பாடியும் ஜெயராமன் முதலியாருக்கு கற்றும் கொடுத்தனர் அந்த பாடல்களை விரும்பி கற்றுக்கொண்ட ஜெயராமன் முதலியார் தான் படிக்கும் மவுண்ட் பள்ளியில் இந்த பாடலை பாடுகிறார் ஆனால் அந்த பள்ளி ஆங்கிலேயரின் பள்ளி என்பதால் அங்குள்ள ஆசிரியர்கள் மிகுந்த கோபத்துடன் ஜெயராமன் முதலியாரை அடித்தனர் ஜெயராமன் முதலியார் அந்த ஆசிரியரை பதிலுக்கு பதில் அடிக்கு அடி கொடுத்துவிட்டு அந்த ஊரைவிட்டே சென்றுவிடுகிறார் எங்கு தேடியும் கிடைக்காத ஜெயராமன் முதலியார் சில மாதங்களுக்கு பிறகு ஹிட்லரின் ஜெர்மன் படையில் பணியாற்றுவதாக தகவல் கிடைக்கிறது...!!! 

அந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய நாட்டின் விடுதலைக்காக ஹிட்லரிடம் உதவி கேட்கிறார் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உங்கள் படையில் உள்ள இந்திய சிப்பாய்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்க அதனை ஏற்ற ஹிட்லர் சுமார் முப்பதாயிரம் வீரர்களை இந்தியா அனுப்புகிறார் அந்த வீரர்கள் இரத்தத்தில் கையெழுத்திட்டு தாய் நாட்டின் விடுதலைக்காக போராட வந்தனர் அதில் ஜெயராமன் முதலியாரும் ஒருவர்...!!!

சரியான உணவு உறக்கம் கிடையாது எந்த வகையிலும் வருமானம் கிடையாது உயிருக்கு உத்திரவாதமும் கிடையாது இதனை எல்லாம் மனப்பூர்வமாக ஏற்று இரத்தத்தில் கையெழுத்திட்டு நாட்டை காக்க வாருங்கள் என்று கூற அதன்படியே வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார் மாவீரர் ஜெயராமன் முதலியார்...!!!

இத்தாலியின் படையில் ஜெயராமன் முதலியார் பணியாற்றிய போது அங்கு நடந்த ஒரு போரில் இவர் பலரை கொன்று குவித்ததால் இத்தாலியன் அரசாங்கம் இவருக்கு ''THE ITALY STAR'' என்ற விருது வழங்கி சிறப்பித்தது ஹிட்லர் அரசாங்கம் மேலும் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு தாமரை பட்டையம் விருது அளித்து கெளரவித்தது மேலும் பாரத் ரத்னா மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் நேதாஜியின் இந்திய ராணுவப்படையில் பணியாற்றியதற்கு ''நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரர்'' எனவும் விடுதலை போராட்ட தியாகி எனவும் கெளரவப்படுத்தினார் மேலும் மாநில அரசு தாமரை பட்டம் விருது வழங்கி சிறப்பித்தது...!!!

சுதந்திரம் பெற வேண்டி சுமார் 8 ஆண்டுகள் குடும்பத்தினரை பிரிந்து இருந்தார் ஜெயராமன் முதலியார் சுதந்திரத்திற்குப் பிறகும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வந்த இவர் 2007ம் வருடம் டிசம்பர் 8ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார் இவர் மறைந்த டிசம்பர் 8ம் நாளில் இந்த மாவீரரை நினைவு கூருவதில் மருது வரலாறு மீட்பு குழு பெருமையும் மகிழ்வும் கொள்கிறது வாழ்க அகமுடையார் வழித்தோன்றல் ஜெயராமன் முதலியார் புகழ்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

Tuesday, 5 December 2017

மேலமண்று திருமால் தேவர் அகமுடையார்


மதுரை நாயக்கர் ஆட்சி காலத்தில் சாப்டூர் ஜமீனில் மதயானை ஒன்று அப்பகுதியை நாசம் செய்து அரண்மனைக்குள் நுழைய முயன்றது அந்த சமயம் போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த திருமால் தேவர் (அகமுடையார்) தன் வாள் கொண்டு யானை துதிக்கையை வெட்டி அந்த யானையை அடக்கினார் இதனை கண்ட திருமலை நாயக்கர் உனக்கு என்ன வேண்டும் என கேட்க அதற்க்கு திருமால் தேவர் #மேல_மண்று (திருமங்கலம் மேற்கு) பகுதியின் வரிவசூல் செய்யும் உரிமை கேட்க அவர் விருப்படியே அந்த பகுதியின் தலைவராகவும் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றார் திருமால் தேவர் 33 கிராமங்களை கொண்ட மேல மண்று இன்றும் இராஜ குல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர் இன்று வரை மேல மண்று தலைவர் திருமால் தேவர் வாரிசுகளே...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

Friday, 17 November 2017

எதிர்ப்பை அழிக்கும் எதிரியை முடக்கும் அகமுடையார் பேரினத்தில் உதித்த பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்


வாழ்வில் ஏதேனும் ஒரு விதத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்பு வரலாம் எவரேனும் ஏதேனும் ஒரு அல்பக் காரணத்துக்காக எதிரியாகவே நம்மை பாவிக்கலாம் தீய சக்திகளான பில்லி, சூனியம் என துஷ்ட காரியங்களில் சிலர் ஈடுபடலாம் எதுவாக இருப்பினும் வேலவன் இருக்கிறான் பயம் கொள்ளத் தேவையில்லை முருகப் பெருமானின் மீது மாறாத பக்தி கொண்டிருந்த அகமுடையார் பேரினத்தில் உதித்த முருகனின் மறு அவதாரம் பாம்பன் சுவாமிகள் இந்த எதிர்ப்புகளை எதிரிகளையும் தீய சக்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்தில் எல்லாப் பக்தர்களின் நலனுக்காகவும் குமாரஸ்தவம் எனும் பாராயணத்தை எழுதினார் மிக எளிமையானதும் மிகுந்த வலிமை மிக்கதுமான இந்தப் பாராயணத்தைத் தினமும் ஒருமுறை சொல்லி வேலவனை வணங்கித் தொழுதால் பயமொன்றும் இல்லை எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பதில் சந்தேகமும் இல்லை என்கிறார்கள் முருக பக்தர்கள்...!!!

எதிர்ப்பு,எதிரி,ஏவல்,பில்லி,சூனியம் ஆகியவற்றைப் போக்கும் குமாரஸ்தவம் இதோ...!!!

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :

2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :

6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :

7. ஓம் நவநிதி பதயே நமோ நம :

8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :

9. ஓம் நரபதி பதயே நமோ நம :

10. ஓம் சுரபதி பதயே நமோ நம :

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :

12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :

13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :

14. ஓம் தபராஜ பதயே நமோ நம :

15. ஓம் இகபர பதயே நமோ நம :

16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :

18. ஓம் நயநய பதயே நமோ நம :

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :

20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :

21. ஓம் வல்லீ பதயே நமோ நம :

22. ஓம் மல்ல பதயே நமோ நம :

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :

27. ஓம் அபேத பதயே நமோ நம :

28. ஓம் சுபோத பதயே நமோ நம :

29. ஓம் வியூஹ பதயே நமோ நம :

30. ஓம் மயூர பதயே நமோ நம :

31. ஓம் பூத பதயே நமோ நம :

32. ஓம் வேத பதயே நமோ நம :

33. ஓம் புராண பதயே நமோ நம :

34. ஓம் ப்ராண பதயே நமோ நம :

35. ஓம் பக்த பதயே நமோ நம :

36. ஓம் முக்த பதயே நமோ நம :

37. ஓம் அகார பதயே நமோ நம :

38. ஓம் உகார பதயே நமோ நம :

39. ஓம் மகார பதயே நமோ நம :

40. ஓம் விகாச பதயே நமோ நம :

41. ஓம் ஆதி பதயே நமோ நம :

42. ஓம் பூதி பதயே நமோ நம :

43. ஓம் அமார பதயே நமோ நம :

44. ஓம் குமார பதயே நமோ நம :

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் இந்த துதி முருகப் பெருமானின் அருளை வேண்டி பாடப்பட்டது இது கந்தபுராணத்தின் சுருக்கம் என்கிறார்கள் மொத்தம் 44 வரிகளை உடையது இந்த குமாரஸ்தவம் தினமும் ஒரு முறை ஒரு முறையேனும் பாராயணம் செய்யவும் எதிர்ப்புகள், எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் ஆகியவற்றை அழிக்கவல்லது இந்த பாராயணம்...!!!

Saturday, 11 November 2017

சிவகங்கை போரில் வீர மரணம் அடைந்த உடையான் சேர்வை முத்தழகு சேர்வை

உடையான்  சேர்வை 

முத்தழகு சேர்வை 

உடையான் சேர்வை முத்தழகு சேர்வை
பயன்படுத்திய வேல்கம்பு ஆயுதங்கள் 

உடையான் சேர்வை மற்றும் முத்தழகு சேர்வை போரில் பயன்படுத்திய வளரி ஆயுதங்கள் 

வேதமுடைய ஐயனார் ஆலயம் 


சிவகங்கைச் சீமை திரைப்படத்தில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் முத்தழகு சேர்வையாக தோன்றும் காட்சிகளில் ஒன்று


இக்கட்டுரையில் நாம் காண்பது மருது சீமையிலே (சிவகங்கைச் சீமையில்) அக்காலத்தில் போரில் வீரமரண அடைந்த உடையான் சேர்வை முத்தழகு சேர்வை எனும் போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த இரு உடன்பிறந்த சகோதரர்கள் பற்றியது...!

சிவகங்கை-மதுரை நெடுஞ்சாலையில் கரும்பாவூர் விலக்கு எனும் பகுதியில் வேதமுடைய ஐயனார் கோவிலின் வெளிப்புறத்தில் கையில் ஆயுதங்கள் தாங்கிய உடையான் சேர்வை மற்றும் முத்தழகு சேர்வை எனும் இரு உடன்பிறந்த சகோதரர்கள் சிற்பங்கள் சிறிய வடிவில் காணப்படுகின்றன...!

1700 களின் பிற்பகுதியில் இப்பகுதியில் வாழ்ந்த இவர்கள் தாங்களே சிறந்த போர்வீரர்களாக இவர்கள் தங்கள் போர்பயிற்சிக்கு இவ்விடத்தைப் பயன்படுத்தியதோடு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இவ்விடத்தை அந்நாளில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று தெரிகிறது சிவகங்கை படைப்பிரிவில் முக்கிய பதவியில் இருந்த இவர்கள் பின்னால் வந்த படமாத்தூர் போரில் கலந்து கொண்டு எதிரிகள் பலரைக் கொன்று பின் இவர்கள் வீரமரணம் அடைந்ததால் இவர்களுக்கு இக்கோவிலில் நடுகல் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது தங்கள் போர்பயிற்சிக்கு உடையான் சேர்வை மற்றும் முத்தழகு சேர்வை பயன்படுத்திய வளரி,வேல்கம்பு போன்ற ஆயுதங்கள் இன்றும் அவர்களின் வாரிசுதார்களால் முத்தரசன் கிராமத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வேதமுடைய ஐயனார் கோவில் திருவிழாவின் போது இந்த ஆயுதங்கள் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது அப்போது கிடாய் வெட்டி பூஜையும் நடக்கின்றது...!

கோவில் அமைந்துள்ள இப்பகுதியில் இன்று குடியிருப்புகள் இல்லை ஆனால் பலகாலம் முன்பு 1700களில் இங்கு போர்பயிற்சியும் குடியிருப்புகளும் இருந்ததற்கு அடையாளமாக இப்பகுதியில் குடியிருப்புகளின் சிதைவுகளும் குதிரை கட்ட பயன்படுத்தப்பட்ட கற்களும் காணப்படுகின்றன...!

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றிய ''சிவகங்கைச் சீமை'' என்ற திரைப்படத்தை தன் சொந்தச் செலவில் தயாரித்த கவியரசு கண்ணதாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார் வேறு எந்த வரலாற்று பதிவுகளிலும் அறிமுகமாகாத ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் பெரியவர்கள் மட்டத்தில் மட்டும் அறிந்த இச்சகோதர்களின் பெயர்களை கண்ணதாசன் அவர்கள் தனது மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ள கிராமம் என்ற வகையில் முத்தரசன் கிராமத்தையும் அதில் வாழ்ந்த வீரர்கள் குறித்தும் அங்கு வாழ்ந்தவர்களிடம் கேட்டு அறிந்திருக்கக் கூடும் இக்கட்டுரையின் நாயகர்களான உடையான் சேர்வை-முத்தழகு சேர்வை என்ற பெயர்களை அறிந்திருக்கக் கூடும் ஆகவே தான் இப்பெயர்களை தனது படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர்களாக (லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் கதாபாத்திரத்திற்கு முத்தழகு சேர்வை என்ற பெயரை) பயன்படுத்த இது அவருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்...!

சிவகங்கை போரில் வீர மரணம் அடைந்த உடையான் சேர்வை முத்தழகு சேர்வை வம்சாவளியினர் இன்றும் வீழ்ந்த தங்கள் முன்னோர்களை தெய்வங்களாக வணங்கிவருவது பாரட்டப்பட வேண்டிய ஒன்று அது நம் பண்பாடும் கூட மேலும் அவர்களின் முழு திருஉருவ சிலையை அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது கூடிய விரைவில் நல்ல மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் நமது மருது வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்...!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

Friday, 10 November 2017

நைனப்பன் சேர்வை




நைனப்பன் சேர்வை என்ற வீரமிக்க தளபதி ஒருவர் மாமன்னர் மருது பாண்டியர்களின் படையில் இருந்தார் அவரது வீரத்தையும் உடல் வலிமையையும் பற்றிக் கேள்வியுற்ற பெரிய மருது பாண்டியர் அவர்கள் அதைச் சோதிக்க விரும்பினார்...!

''நைனப்பன் சேர்வை” அவர்களே நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன் ஏற்றுக்கொள்ளச் சம்மதமா...? எனக் கேட்டார் பெரிய மருது பாண்டியர் சரி அரசே எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் உங்கள் சித்தத்தை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார் நைனப்பன் சேர்வை போட்டியானது சிவகங்கைக்கும் கடியாவயல் என்னுமிடத்திற்கும் உள்ள தூரம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும் இந்த 25 கி.மீட்டர் தூரத்திற்கும் பெரிய மருதுபாண்டியர் குதிரையில் இருந்தபடி போய் வருவார் ஆக மொத்தம் 50 கி.மீட்டர் இந்த தூரத்தை நைனப்பன் சேர்வை குதிரைக்குச் சமமாக ஓடிக் கடக்க வேண்டும் இதுதான் போட்டி போட்டி தொடங்கியது...!

நைனப்பன் சேர்வை அவர்களே நீங்கள் என் குதிரைக்கு முன்னதாக இரண்டு பர்லாங் தூரம் ஓடுங்கள் அதன் பிறகு நான் புறப்படுகின்றேன் என்றார் பெரிய மருது பாண்டியர் நைனப்பன் ஓடினார் பின்னாலேயே குதிரையும் பாய்ந்து வந்தது அருகில் குதிரை வந்ததும் நைனப்பன் சேர்வை பெரிய மருது அவர்கள் அமர்ந்திருந்த குதிரையின் பின்னாலேயே நெருக்கமாக ஓடினார் குதிரை தன் இயல்பான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது நைனப்பரும் ஓடினார் வழியில் பார்த்தவர்களெலலாம் படபடப்பாகப் பேசிக் கொண்டீர்கள்...!

சிலர் என்ன இது கொடுமை மனிதனையும் குதிரையையும் ஒன்றாக பாவிப்பார்களா...??? என பலர் பேசினர் பிறகு சரி அரசர் செய்தால் எதிலும் ஒரு நல்ல உள்நோக்கம் மறைந்திருக்கும் நாட்டை நல்ல முறையில் ஆள்பவரும் மக்களைக் கண்ணாக மதித்து ஆள்பவரும் மன்னர் மருது பாண்டியர்கள் கொடுமையாக எதையும் செய்யமாட்டார் என்று பேசிக் கொண்டனர் ஓடிக் கொண்டிருந்த நைனப்பரின் காலில் ஒரு கருவேல முள் குத்திவிடுகிறது போட்டி அவ்வளவுதான் என்றுதானே நினைப்பீர்கள் அதுதான் இல்லை அந்த முள்ளை எடுப்பதற்காக உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டால் குதிரை மறைந்துவிடுமே என்று யோசிக்கும் நேரத்தில் நைனப்பன் சேர்வை தனது இடுப்பில் இருந்த ''வளரி” என்ற ஆயுதத்தால் முள் தைத்த காலை தூக்கி முள்ளை உள் நோக்கி அழுத்தினார்...!

முள் கால் பாதத்திற்குள் நுழைந்துவிடுகிறது வழியைப் பொறுத்துக் கொண்டு குதிரையோடு சேர்ந்து ஓடிச் சரியாக கடியாவயலை அடைந்துவிடுகிறார் மறுபடியும் திரும்பிச் சிவகங்கை நோக்கி ஓடத் தலைப்பட்ட நைனப்பன் சேர்வையைத் தடுத்து அணைத்துக் கொண்டார் மாமன்னர் பெரியமருது பாண்டியர் அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது...!

நைனப்பன் சேர்வை உங்களின் வீரத்தை நமது சிவகங்கை சீமை மட்டுமல்ல இந்த உலகமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடுமையான போட்டியை நான் வைத்தேன் நானும் காட்டில் பல சமயம் பல கிலோமீட்டர் தூரத்தைக் குதிரையை விட வேகமாக ஓடியெல்லாம் கடந்திருக்கின்றேன் உங்களது வீரம் வாழ்க வைத்தியரைக் கூப்பிடுங்கள் நைனப்பரின் காலில் இருக்கும் முள்ளை உடனே அகற்றுங்கள் என்று கட்டளையிட்ட மன்னர் ஊரும் உலகமும் அறியும் வண்ணம் நைனப்பன் சேர்வையைப் பாராட்டி மாலையும் மரியாதையும் பொன்னும் பொருளும் வழங்கினார் மாமன்னர் பெரிய மருது பாண்டியர்...!

நைனப்பன் சேர்வை அவர்களிடம் இருந்த வளரி இன்று சிவகங்கை அருங்காட்சியில் உள்ளது அதை அவரின் வாரிசுதார் கொடுத்துள்ளனர் இன்று அதன் வடிவம் மாறாமல் புதியதாக செய்யப்பட்டது போல் உள்ளது ஒரு சமயம் மருது பாண்டியருடன் சென்ற நைனப்பன் சேர்வைக்கு வேட்டைக்கு காட்டிற்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது இருவரும் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள் அப்போது எதிர்பாராதவிதமாக புலிவொன்று புதரிலிருந்து வெளிப்பட்டு நைனப்பன் சேர்வையை நோக்கிப் பாயந்தது புலியோடு போராடி அதனைக் கொன்றார் நைனப்பன் சேர்வை பிறகு அப்புலியின் பற்களைப் பிடுங்கிப் பெரிய மருது பாண்டியர் அவர்களின் காலடியில் ''அரசே இது என் காணிக்கை” என்று கூறிப் புலிப் பற்களை வைத்தார் ஆனால் இப்படிப்பட்ட மாவீரனைப் புலியின் பண்பட்ட நகம்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்று வைத்தியர்களைத் தோல்வி அடையச் செய்தன நைனப்பன் சேர்வை மறைந்த போது வைர நெஞ்சத்தை உடையவராக இருந்த மாமன்னர் மருது பாண்டியர்கள் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்...!

நைனப்பன் சேர்வையின் குடும்பத்திற்குத் தனது குடும்பத்தை போல் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் பெரிய மருதுபாண்டியர் அவர் மனமுவந்து கொடுத்த சொத்துக்களை இன்றைய தினமும் நைனப்பன் சேர்வையின் சந்ததியினர் அனுபவித்து வருகிறார்கள் சிவகங்கைக்கு அருகில் 12 கி.மீ. தூரத்தில் சாத்தரசன் கோட்டையில் வடபுறத்தில் ஒரு பெரிய ஊரணியை வெட்டி அந்த ஊரணிக்கு #நைனப்பர் #ஊரணி என்று பெயர் வைத்துள்ளார்கள் அவர் பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது இப்படி பல நூறு வீர நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு மக்களை வீரமிக்கவர்களாக ஆக்கி வைத்திருந்தார்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ...!!! 

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

சுபேதார் சுலைமானுக்கு மாமன்னர் பெரிய மருது பாண்டியர் கட்டிய சமாதி





சுபேதார் சுலைமானுக்கு மாமன்னர் பெரிய மருது பாண்டியர் சிவகங்கையில் பட்டரைக் கண்மாய் என்ற கிராமத்தில் கட்டிய சமாதி பற்றி இந்த பதிவில் காண்போம்...!!!

மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் தான் சுலைமான் இவன் காளையார் கோயில் மீது படையெடுக்க சரியான தருணத்தை கணக்கிடுவதற்காகவும் மருது பாண்டியர்களின் படையின் வலிமையை அறிந்து கொள்ளவும் அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்து சரியான நேரத்தில் படையெடுக்க ஆற்காடு நவாப்பால் அனுப்பப்பட்ட ஒற்றன் ஆவான் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் மருது பாண்டியரைக் கொலை செய்வதற்குக் கூட சுலைமானுக்கு யோசனை சொல்லப்பட்டதாம் அந்த சமயத்தில் அங்கு வந்த சுலைமான் மருது பாண்டியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அதிகமாக வரும் நீர் ஊற்றை தான் தடுத்துவிடுவதாகச் சொல்கிறான் அதுகேட்டு மன்னர் மருதிருவர் மன மகிழ்ச்சி அடைகிறார்கள் உடனே சுலைமானுக்கு நீர் ஊற்றை அடைக்க தேவையானவற்றை கொடுக்க வேலையாட்களிடம் பணித்தார்கள் மருது பாண்டியர்கள்...!

சுலைமான் பத்து வண்டி அளவு அயிரை மீன்கள் வேண்டும் என்றார் அடுத்த நாள் காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் செய்தி அனுப்பி அயிரை மீன்களையும் அஸ்திவாரம் தோண்டிய நீர் தேக்கிய பகுதிகளில் சுலைமான் ஆற்று மணலுடன் சேர்த்துப் போட்டதால் ஒவ்வொரு மீனும் மணலைகளைக் கவ்விக்கொண்டு நீர் ஊற்றை அடைத்தது அதன் பின்னர் நீரின் கசிவு ஏற்படாததால் கோபுரம் கட்டும் வேலை சுணக்கம் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது இதனை கண்ட மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி சுலைமானிடம் உனக்கு என்ன வேண்டும் என மருதரசன் கேட்டார் அதற்கு சுலைமான் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டார் இந்த சுலைமான் பல மொழி பேசும் திறமை பெற்றவர் அத்தோடு வானத்தில் பறக்கும் பறவையை குறிதவறாது வேட்டையாடும் கலையை நன்கறிந்தவர் அத்துடன் மல்யுத்தம், சிலம்பு ஆட்டம் கற்றறிந்தவர் மகா புத்திசாலி
அப்படிப்பட்டவரை மருது பாண்டியர்கள் அவர்கள் தனது அரண்மனையிலேயே அதன் உள்ளே உள்ள குதிரை லாயத்தின் முழுப் பொறுப்பையும் கவனிக்க முழு அதிகாரத்தை சுலைமானுக்கு கொடுத்து கௌரவித்தார்...!

காலப் போக்கில் மருது சகோதரர்களின் உண்மையான உணர்வுகளும் சிறந்த சிந்தனைகளும் அவர்களுக்கு மக்களிடத்தில் அவர்கள் காட்டும் அன்பையும் நேரில் பார்த்த பொழுது சுபேதார் சுலைமான் மனம் மாறினார் அவர் உளவாளியாக வந்த ஆற்காட்டருக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை இப்படிப் பல மாதங்கள் உருண்டோடின ஒரு நாள் பெரிய மருது பாண்டியர் சிவகங்கைக்கு அரசு வேலையாக சென்றிருந்தார் சின்ன மருது பாண்டியர் அவரின் நம்பிக்கைக்கு உரிய கரடிக் கறுத்தானைக் கூட்டிக் கொண்டு காளையார் கோயிலுக்கு சென்றார் (இந்தக் கரடி கறுத்தான் தான் பின்னாளில் வெள்ளையனின் பொருளுக்கு ஆசைப்பட்டு சின்ன மருது பாண்டியரை துப்பாக்கியால் சுட்டு காலை உடைத்து ஒரு மிருகம் போல வேட்டையாடி வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்தவன்) அங்கு ஒரு வெள்ளை புறா பறந்து சென்றது சின்ன மருது பாண்டியர் தனது வளரியை எடுத்து பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி வீசினார் குறிதவறாது புறா மீது வளரி தாக்கி புறா கீழே விழுந்து கொண்டிருந்தது அது தரையில் விழு முன் சுலைமான் புறாவை தனது கையில் பிடித்தார் அதை அருகில் இருந்து பார்த்த சின்ன மருது பாண்டியருக்கு ஒரே ஆச்சரியம் வளரியால் வீழ்த்திய புறாவை இடையிலேயே பிடிப்பவன் தனக்கு அடுத்து இந்த கரடி கறுத்தான் ஒருவனே ஆனால் இந்த வித்தை சுலைமானுக்கு எப்படித் தெரியும் என்று அப்பொழுது கறுத்தான் சுலைமானின் கையிலிருந்து புறாவைக் கவனித்தான் அதன் கால்களில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது அதை உடனே சின்ன மருதுவும் நோக்கினார் அதன் எழுத்து உருது மொழியில் இருந்தது அதில் ஆற்காட்டான் எப்பொழுது காளையார் கோயிலுக்கு படையெடுத்து வரலாம் என சுலைமானின் யோசனையைக் கேட்டு எழுதி இருந்தது...!

இந்தச் செய்தியை படித்தமட்டில் சின்ன மருதுவுக்கு கோபம் எல்லை மீறிப் போய்விட்டது அடேய் ராஜதுரோகி உன்னை எனது அண்ணன் பெரிய மருது பாண்டியர் எப்படியெல்லாம் உயர்வாக நடத்துகிறார் அதற்கு நீ காட்டும் நன்றிக் கடன் இது...? என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தார் இது கண்டு சுலைமானுக்கு மிகுந்த மனவேதனை அடைந்தார் உடனே மன்னர் அவர்களே நான் சொல்லும் விளக்கத்தினை தயவுசெய்து செவிமடுத்துக் கேட்கவும் நான் ஒற்றனாய் வந்தது உண்மை ஆனால் இங்கு உங்களையும் பெரிய மன்னரையும் கண்டவுடன் அவர் ஆட்சியையும் அவர் நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பை பார்த்த பின்பு நான் வந்த வேலையை மறந்தேன் அத்தோடு ஆற்காட்டருக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை அதனால் தான் அவர்கள் எனது நோக்கம் அறிய புறா மூலம் தூதுவிட்டுள்ளனர் என்றார் சின்ன மருது பாண்டியர் எந்த விளக்கத்தையும் கேட்பதாக இல்லை உடனே அவருக்குத் தெரிந்த கத்திச் சண்டை, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டில் எப்படியும் சுலைமானின் உயிரைப் போக்க வேண்டும் என முடிவு செய்தார் அதற்கு சுலைமானும் சளைக்காமல் சின்னமருதுவுக்கு சமமாக அவரும் ஈடு கொடுத்து சமாளித்தார் ஆனால் கடைசியில் சின்ன மருது பாண்டியர் அவர்களின் மர்ம அடி (தற்போது சொல்லுகிற குங்பூ) சுலைமானின் நெற்றியில் பட்டு அக்கணமே சுலைமானின் உயிர் பிரிந்தது...!

சிவகங்கையில் உள்ள பெரிய மருது பாண்டியருக்கு இந்த துயரமான செய்தி கிடைத்தவுடன் மிகவும் மன வேதனைப்பட்டார் மனம் மாறிய சுலைமானை சின்ன மருது கொன்றுவிட்டானே என அப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அப்படி ஒரு செயலை சின்ன மருது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போலும் தனது உண்மையான ஊழியன் என எண்ணப்பட்ட கரடிக் கறுத்தான் மருது பாண்டியரைக் காட்டிக் கொடுத்தான் ஆனால் ஒற்றனாய் வந்த சுலைமான மருதுவுக்கு அதரவாக இருந்துள்ளார் இது காலத்தின் கோலம் தானே பெரிய மருதுவின் மனம் அம்மாவீரனுக்கு அவரின் ஞாபகமாக பட்டரைக் கண்மாய் என்ற ஊரில் ஒரு பெரிய சமாதி ஒன்றைக் கட்டினார் அத்தோடு அவரின் சந்ததியினருக்கு பல நிலங்களை தானமாக கொடுத்தாராம் அந்த நினைவிடத்தில் இன்றும் விவசாய காலம் ஆரம்பிக்கும் பொழுதும் பின் அறுவடை நடைபெறும் காலத்திலும் சுபேதார் சுலைமானின் சமாதியில் காணிக்கை செலுத்தி அவரின் நினைவாக எல்லா சமூகத்தினரும் வணங்கிச் செல்வது அங்கு வழக்கமாக கொண்டுள்ளனர் இச்செய்தியை மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் அவர்கள் மருதுபாண்டியர் நினைவு நாளில் சொல்லக் கேட்டது...!

பட்டரை கண்மாய் கிராமத்தில் மாமன்னர் பெரிய மருது பாண்டியரால் கட்டப்பட்ட சுலைமான் சமாதி தற்போது அவர்களது வாரிசுதார்களின் வசம் உள்ளது அவர்கள் தான் பராமரிப்பு செய்கிறார்கள்...!!!

புகைப்படம் உதவி Jram Agamudayar

#மருது

இவன் மருது வரலாறு மீட்பு குழு

அகமுடையார் பேரினத்தில் பிறந்த பொதுவுடைமை போராளி வாட்டாக்குடி இரணியன்




பொதுவுடைமைப் போராளி வாட்டாக்குடி இரணியன் வரலாறு...!!!

வாட்டாகுடி இரணியன் மற்றும் சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும்  அகமுடையார் எனும் தமிழ் பெரும்குடியில் பிறந்து  தாழ்த்தப்பட்ட மற்றும் விவசாயக் கூலி மக்களுக்காகப் போராடி தங்கள் உயிரை இழந்தவர்கள் வாட்டாகுடி இரணியன் பற்றிய திரைப்படம்  “இரணியன் ” என்ற பெயரில் 1999ம் ஆண்டு வெளிவந்தது அரசியல் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாக இப்படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டது...!

வாட்டாக்குடி இரணியன் தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர்-தையல் அம்மாளுக்கு 1920 நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன் இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம் தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும் வேலைபார்த்தார் அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி,வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது.இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்...!

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார் ”இரத்தம் தாருங்கள் விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவத்தில்'' சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார் சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார் 1946ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்தினார் மலேசிய முதலாளிகளும் ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக் கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவினார் இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார்...!

1948ல் மலேசியா பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்தது பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் தலைமறைவானார்கள் தனது 28 வது வயதில் இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பினார் 1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது இந்தியாவிலும் பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நேரம் அவரது ஊரான வாட்டாக்குடியில் நிலப்பிரபுக்களின் கொடுமை விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது ”சாணிப்பாலும் சவுக்கடியும்'' விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்...!

நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார் இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர் மீண்டும் தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன் தொடர்புடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர் 1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை காவல்துறை சுட்டுக்கொன்றது #வடசேரி காட்டில் மறைந்திருந்த இரணியனை காவல்துறை நெருங்கியது காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் ஓடமுடியவில்லை இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக் காட்டிக்கொடுத்தார்...!

1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் பிடித்தனர் ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால் அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர் சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு உயிர்நீத்த வாட்டுக்குடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும் #அகமுடையார் இனத்தை சேர்ந்தவர்கள் தமிழ்ச்சாதியான இவர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு வருங்கால இளைஞர்களுக்கு சமர்ப்பணம்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அகமுடையார்



போர்க்குடி அகமுடையார் வரலாற்றில் முதல் முறையாக மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருவான இராமநாதபுரதின் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அகமுடையார் படத்தை பயன்படுத்தி திருமணம்  பிளக்ஸ் மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்களால் அளிக்கப்பட்டது நமது வரலாற்றையும் நமது அகமுடையார் வழித்தோன்றல்கள் வரலாற்றையும் மறக்க கூடாது என்ற நோக்கத்துடன் இந்த பிளக்ஸ் அளிக்கப்பட்டது...!!! 

இராம்நாடு பாலா சேர்வை அவர்களின் சகோதரி திருமண விழா பிளக்ஸ்...!!! 

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

மருது பாண்டியர்கள் சிலைகளின் கைகளின் அமைப்பிற்கான காரணம்



பல இடங்களில் மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலையின் கைகளின் அமைப்பு இது போன்று இருக்கும் இதற்கான காரணம் என்னவென்று தெரியுமா...?

மகாபுத்திசாலியான சின்ன மருது பாண்டியர் மிகவும் முன்கோபம் மிக்கவர் யோசிக்காமல் வாளை எடுத்து எதிரியை தாக்க கூடியவர் ஆனால் பெரிய மருது பாண்டியர் இடத்தை பொருத்து சிந்தித்து செயல்படுவார்...!

இதன் அடிப்படையில் தான் சின்ன மருது பாண்டியர் உறையில் இருந்து அவரது வாளை எடுப்பது போன்றும் அதனை பெரிய மருது பாண்டியர் இடது கையால் பொறுமை தம்பி என்று கூறுவது போல இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது பல இடங்களில் மருது பாண்டியர்களின் சிலை அமைப்பு இது போன்று தான் இருக்கும்...!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் திருப்பணிகள்



மருது சீமை (சிவகங்கை) மாவட்டத்தில் திருப்பத்தூரில் அமைந்துள்ள திருத்தளிநாதர் ஆலயத்தின் உள்ளே வைரவரின் சன்னதியை கட்டியது மாமன்னர் மருது பாண்டியர்கள் அதே சன்னதியில் மருது பாண்டியர்களின் முழு உருவ சிலைகள் உள்ளன மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமையினை ஆட்சி செய்தது குறுகிய காலம் என்றாலும் கோவில் மசூதி தேவாலயம் போன்ற திருப்பணிகள் அவர்களின் சக்திக்கு மீறியது...!!! 

இவன் மருது வரலாறு மீட்பு குழு

நீதி தவறாத அகமுடையார் எத்திராஜ் முதலியார்



சென்னையில் எத்திராஜ் என்னும் மகளீர் கல்லூரியை தன் சொந்த நிதியில் நிறுவிய எத்திராஜ் முதலியார் (அகமுடையார்) பற்றி அறிந்து கொள்வோம்...!

எத்திராஜ் என்ற அகமுடையார் இல்லையென்றால் இம்மானுவேல் கொலை வழக்கில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஜென்மத்திற்கும் வெளியே வந்திருக்கவே முடியாது ஏனென்றால்
அன்றைய காலகட்டத்தில் பெரியார் உட்பட தமிழகத்தின் பெரும் ஆளுமையாக விளங்கிய பலரும் நேரடியாக மற்றும் மறைமுகமாக முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வெளியே வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாயிருந்தனர் குறிப்பாக பெரியார் முத்துராமலிங்கத் தேவர் பெரும் குற்றவாளி எனவும் ஏற்பட்ட சாதிக்கலவரத்திற்கு அவரே காரணம் எனவும் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் மேடை தோறும் முழங்கினார் அறிக்கைகளும் வெளியிட்டார்...

ஆனால் அத்தகைய அசாதாரண சூழ்நிலையிலும் பெரும் ஆளுமைகளின் எதிர்ப்புகளுக்கு இடையிலும் எத்திராஜ் முதலியார் முத்துராமலிங்கத் தேவர் இவ்வழக்கில் தேவையில்லாமல் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தார்...

மேலும் எத்திராஜ் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அல்ல அவர் அரசு வழக்கறிஞர் அரசு வழக்கறிஞர் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சிகளை தயாரித்து குற்றத்தை நிரூபிக்கச் செய்ய வேண்டியதே மரபாகும் ஆனால்
அரசு வழக்கறிஞரான எத்திராஜ் அவர்களோ குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக திறமையான வாதங்களை வைத்ததாலேயே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார் எதிலும் நியாயத்தோடு நடந்து கொள்பவன் தான் #அகமுடையான் என்பதை நிரூபித்தவர் எத்திராஜ் அகமுடையார் அவர்கள்...!

வரலாற்றை மறந்து விடாதீர்கள் மறைத்தும் விடாதீர்கள் என்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் நமது மருது வரலாறு மீட்புகுழு #மருது

மேற்கோள்கள்
முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டது குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கை

http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1447863194/21151-2012-09-14-09-23-48

சிவகங்கை வேலூர் கிராமத்தின் சிறப்பு



216 வருடங்களுக்கு முன்பு நமது மருது சீமை (சிவகங்கை) வேலூர் கிராமத்தின் சிறப்பு அம்சங்கள்...!!!

மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் மானாமதுரை பகுதியில் வேலூர் கிராமத்தில் மக்கள் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கினார்கள் அதை கண்ட மருது சகோதரர்கள் அவர்களை சுமார் 18 கிராமங்களுக்கு காவல் வேலையில் அமர்த்தி இந்த ஊர்களை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்றனர் அதன்படி வேலூரை தலைகிராமமாக கொண்டு இன்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை காவல் காத்து கொண்டு வருகிறார்கள் வேலூர் அகமுடையார்கள் இதில் சீரம்பட்டி அகமுடையார்கள் சில ஊர்களுக்கு கணக்கு சம்பந்தப்பட்ட வேலை பார்த்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது இன்னும் வேலூர் அகமுடையார்களை கண்டு நிறைய கிராமங்கள் மரியாதை கொடுத்து வரவேற்கின்றனர் என்பது பெருமையான செய்தி மருது அரசர்கள் நியமித்த வேலூர் காவல்காரர்களின் வம்சாவளி இன்னும் சில கிராமங்களை காவல் காத்து வருகிறார்கள் மானாமதுரை பகுதியிலே வேலூர் கிராமம் 216 ஆண்டுகளாக ஒரே மாதிரியான நிலைமையும் தோற்றமும் இன்னும் கொண்டிருக்கிறதாம் அருகில் உள்ள கொம்புகரனேந்தல் மருது பாண்டியரின் பாட்டி ஊர் அடிக்கடி இவ்வூருக்கு வந்து நலம் விசாரிப்பார்களாம் இவ்வூரை சேர்ந்த ஒருவர் ஐயாவின் பாதுகாவலராக விளங்கினார் என்று இப்பகுதி அகமுடையார் மக்கள் கூறுகிறார்கள்...!!! 

இவன் மருது வரலாறு மீட்பு குழு