![]() |
உடையான் சேர்வை |
![]() |
முத்தழகு சேர்வை |
![]() |
உடையான் சேர்வை முத்தழகு சேர்வை பயன்படுத்திய வேல்கம்பு ஆயுதங்கள் |
![]() |
உடையான் சேர்வை மற்றும் முத்தழகு சேர்வை போரில் பயன்படுத்திய வளரி ஆயுதங்கள் |
![]() |
வேதமுடைய ஐயனார் ஆலயம் |
![]() |
சிவகங்கைச் சீமை திரைப்படத்தில் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் முத்தழகு சேர்வையாக தோன்றும் காட்சிகளில் ஒன்று |
சிவகங்கை-மதுரை நெடுஞ்சாலையில் கரும்பாவூர் விலக்கு எனும் பகுதியில் வேதமுடைய ஐயனார் கோவிலின் வெளிப்புறத்தில் கையில் ஆயுதங்கள் தாங்கிய உடையான் சேர்வை மற்றும் முத்தழகு சேர்வை எனும் இரு உடன்பிறந்த சகோதரர்கள் சிற்பங்கள் சிறிய வடிவில் காணப்படுகின்றன...!
1700 களின் பிற்பகுதியில் இப்பகுதியில் வாழ்ந்த இவர்கள் தாங்களே சிறந்த போர்வீரர்களாக இவர்கள் தங்கள் போர்பயிற்சிக்கு இவ்விடத்தைப் பயன்படுத்தியதோடு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இவ்விடத்தை அந்நாளில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று தெரிகிறது சிவகங்கை படைப்பிரிவில் முக்கிய பதவியில் இருந்த இவர்கள் பின்னால் வந்த படமாத்தூர் போரில் கலந்து கொண்டு எதிரிகள் பலரைக் கொன்று பின் இவர்கள் வீரமரணம் அடைந்ததால் இவர்களுக்கு இக்கோவிலில் நடுகல் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது தங்கள் போர்பயிற்சிக்கு உடையான் சேர்வை மற்றும் முத்தழகு சேர்வை பயன்படுத்திய வளரி,வேல்கம்பு போன்ற ஆயுதங்கள் இன்றும் அவர்களின் வாரிசுதார்களால் முத்தரசன் கிராமத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வேதமுடைய ஐயனார் கோவில் திருவிழாவின் போது இந்த ஆயுதங்கள் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது அப்போது கிடாய் வெட்டி பூஜையும் நடக்கின்றது...!
கோவில் அமைந்துள்ள இப்பகுதியில் இன்று குடியிருப்புகள் இல்லை ஆனால் பலகாலம் முன்பு 1700களில் இங்கு போர்பயிற்சியும் குடியிருப்புகளும் இருந்ததற்கு அடையாளமாக இப்பகுதியில் குடியிருப்புகளின் சிதைவுகளும் குதிரை கட்ட பயன்படுத்தப்பட்ட கற்களும் காணப்படுகின்றன...!
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றிய ''சிவகங்கைச் சீமை'' என்ற திரைப்படத்தை தன் சொந்தச் செலவில் தயாரித்த கவியரசு கண்ணதாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார் வேறு எந்த வரலாற்று பதிவுகளிலும் அறிமுகமாகாத ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் பெரியவர்கள் மட்டத்தில் மட்டும் அறிந்த இச்சகோதர்களின் பெயர்களை கண்ணதாசன் அவர்கள் தனது மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ள கிராமம் என்ற வகையில் முத்தரசன் கிராமத்தையும் அதில் வாழ்ந்த வீரர்கள் குறித்தும் அங்கு வாழ்ந்தவர்களிடம் கேட்டு அறிந்திருக்கக் கூடும் இக்கட்டுரையின் நாயகர்களான உடையான் சேர்வை-முத்தழகு சேர்வை என்ற பெயர்களை அறிந்திருக்கக் கூடும் ஆகவே தான் இப்பெயர்களை தனது படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர்களாக (லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் கதாபாத்திரத்திற்கு முத்தழகு சேர்வை என்ற பெயரை) பயன்படுத்த இது அவருக்கு தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்...!
சிவகங்கை போரில் வீர மரணம் அடைந்த உடையான் சேர்வை முத்தழகு சேர்வை வம்சாவளியினர் இன்றும் வீழ்ந்த தங்கள் முன்னோர்களை தெய்வங்களாக வணங்கிவருவது பாரட்டப்பட வேண்டிய ஒன்று அது நம் பண்பாடும் கூட மேலும் அவர்களின் முழு திருஉருவ சிலையை அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது கூடிய விரைவில் நல்ல மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் நமது மருது வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்...!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment