மருது பாண்டியர்களின் பெயர் காரணம் :
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் தந்தை மொக்கை பழனியப்பன் என்கிற உடையார் சேர்வையின் குலதெய்வம் மதுரை மாவட்டம் மருதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள மருதாருடைய அய்யனார் ஆவார்...!
மாமன்னர் மருது பாண்டியர்களின் தாய் புதுப்பட்டி பொன்னாத்தாளின் குலதெய்வம் சிவகங்கை மாவட்டம் வானியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள மருதப்ப அய்யனார் ஆவார்...!
உறவுகளே இப்போது புரிகிறதா மருது பாண்டியர்களின் தாய் தந்தை அவர்களது குலதெய்வத்தின் #மருது என்ற பெயரையே தனது இரு மகன்களுக்கும் சூட்டியுள்ளனர் மேலும் பெரிய மருது பாண்டியரின் இயற்பெயர் வெள்ளை மருது என்பதாகும் இராமநாதபுரதின் கிங் மேக்கர் என்று அழைக்கப்படும் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் வீரத்தையும் விவேகத்தையும் அறிந்த மருது பாண்டியர்களின் தந்தை உடையார் சேர்வை தனது மூத்த மகன் வெள்ளையன் சேர்வை போன்று மாபெரும் வீரனாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வெள்ளை மருது என்று பெயர் வைத்தார் இதே வெள்ளையன் சேர்வை தான் மருது பாண்டியர்களுக்கு போர் பயிற்சி அளித்த குரு ஆவார்...!!!
No comments:
Post a Comment