Friday, 10 November 2017

பதினென் சித்தர்களுள் ஒருவர் சுந்தரானந்தர்


ஆவனி ரேவதி நட்சத்திரம் சுந்தரானந்தர் #பிறந்த #தினம் அகமுடையார் பேரினத்தில் உதித்த பதினென் சித்தர்களுள் ஒருவரான #சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் இவர் அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்று போகர் கூறுகின்றார்...!

வரலாறு:

இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார் இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும் சட்டை முனியால் ஆட்கொள்ளப்பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப்படுகிறது இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது சுந்தரானந்தர் மதுரை நகரின் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும் பெண்ணை ஆணாக்கியும், ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும்,திடிரென மறைந்தும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் பாண்டிய மன்னனிடம் தெரிவிக்க சித்தரை அரண்மனைக்கு அழைத்துவர ஆள் அனுப்ப சுந்தரானந்தர் அரசன் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பினார் சித்தரைப் பார்க்க அரசர் வந்தார் அப்போது ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன் சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உண்ணும்படியாகச் செய்யுங்கள் என்றார் சித்தர் கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார் யானை கரும்பை பெற்று உண்டது மீண்டும் கல் யானையாக மாறியது அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டனர் அன்பும் பக்தியும் பெருக்கெடுத்தோட சித்தரின் காலில் விழுந்து பாண்டிய மன்னர் வணங்கினார் என்று செவிவழிச் செய்திகள் சித்தரை பற்றி உள்ளது மேலும் இன்றும் அந்த கல்யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே காணலாம்...!

சமாதி:

இவர் மதுரையிலே
சமாதியடைந்ததாக சொல்லப்
படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது...!

சுந்தரானந்தர் இயற்றிய நூல்கள்

*சோதிட காவியம்
*வைத்தியத் திரட்டு
*தண்டகம்
*முப்பு
*சிவயோக ஞானம்
*அதிசய காராணம்
*பூசா விதி
*தீட்சா விதி
*சுத்த ஞானம்
*கேசரி
*வாக்கிய சூத்திரம்
*காவியம்
*விச நிவாரணி

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment