Monday, 30 October 2017

சுதந்திர போராட்ட தியாகி அகமுடையார் சமுதாயத்தின் சரித்திர நாயகன் பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அகமுடையார்

அகமுடையார் வழித்தோன்றல் பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அகமுடையாரின் பிறந்த தினம் இன்று (29.10.2017)

சுதந்திர போராட்ட தியாகி அகமுடையார் சமுதாயத்தின் விடிவெள்ளி முடிசூடா மன்னன் பட்டுக்கோட்டை ஸ்ரீமான் வை.நாடிமுத்து பிள்ளை அவர்கள் இந்த இனத்தின் வளர்சிக்கு வழிவகுத்த சிகரம் உலகில் முதன் முதலாக அகமுடையார்கென சங்கம் உருவாக்கியவர் (சென்னை மாகான அகமுடையார் மகாசன சங்கம்) 1926 ஆம் ஆண்டு துவக்கி அதன் நிறுவன தலைவராக சமுதாய பணியாற்றினார் ஐயா பட்டுகோட்டையார் “அகமுடையார் சரித்திரத்தின் நாயகன்” சங்கம் வைத்து மாநிலம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தியவர் மற்ற சமுதாயம் தங்கள் வாழும் பகுதியில் மட்டுமே சங்கம் வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்க மாநிலம் தழுவிய சங்கம் வைத்து பலருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் “ஐயா வை.நாடிமுத்து பிள்ளை” அவர்கள் மேலும் அக்காலத்திலே மாபெரும் 4 அகமுடையார் மாநாடுகளை நடத்தியவர்...!!!

இந்த நல்ல நாளில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் பட்டுக்கோட்டையில் ஐயாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி வந்தோம்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

சிவகங்கை முத்தூர் அரண்மனையில் கண்டெடுக்கப்பட்ட கருப்பாயி ஆத்தாளின் திருஉருவ சிலை

மருது வரலாறு மீட்பு குழு மூலமாக சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை சீமையில் அமைந்துள்ள மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மனைவி கருப்பாயி ஆத்தாளின் முத்தூர் அரண்மனை சுத்தம் செய்து பாதுகாத்து வருகின்றோம் இது அனைவரும் அறிந்ததே...!!!

தற்பொழுது அக் 27 குருபூஜை முன்னிட்டு முத்தூர் அரண்மனையை சுத்தம் செய்து சீரமைக்கும் பணியில் நமது மருது வரலாறு மீட்புகுழு ஈடுபட்ட பொழுது அங்கு 2 அடி ஆழத்தில் #கருப்பாயி ஆத்தாளின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது...!!!

கருப்பாயி ஆத்தாளின் சிலையை முத்தூர் மக்கள் அனைவரும் வியந்து பார்த்து வணங்கி வருகிறார்கள் விரைவில் சிலை சுத்தம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது...!!!

என்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் நமது மருது வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்...!!!

சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்த சாத்தப்பன் ஞானியார் (அகமுடையார்)

சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்த சாத்தப்பன் ஞானி (அகமுடையார்) அவர்களுக்கு அக் 27 காளையார் கோவிலில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...!!!

ஆனால் ஒரு சிறு வருத்தம் உண்டு சாத்தப்பன் ஞானியார் பற்றி பல முறை முகநூலில் பதிவு செய்தும் நமது உறவுகளுக்கு விழிப்புணர்வு வரவில்லை இந்த முகநூலில் ஆயிரக்கணக்கான அகமுடையார் இளைஞர்கள் உள்ளனர் அதில் #சாத்தப்பன் #ஞானியார் பற்றி அறிந்த அகமுடையார் 10 பேர் கூடவா இல்லை அக்டோபர் 27 காளையார் கோவிலுக்கு வந்த இளைஞர்கள் 10 பேர் சாத்தப்பன் ஞானி அகமுடையார் சிலைக்கு மாலை அணிவித்து இருந்தால் கூட அகமுடையார் மக்களிடையே பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும் ஆனால் யாரும் அதை செய்யவில்லை என்பது வருந்தத்தக்கது...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

மருது சீமை முத்தரசன் கிராமத்தில் குருபூஜை திருவிழா

மருது சீமை சிவகங்கையிலே அக் 27 மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை அன்று முத்தரசன் கிராமத்தில் மருது வரலாறு மீட்பு குழு பெயர் பொறித்து மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்கள் சார்பில் திறக்கப்பட்ட போர்டு...!!!

Tuesday, 24 October 2017

சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்ட சரித்திர படம்


அக்டோபர் 24 1801 சுதந்திர போராட்ட தியாகிகள் மருது சீமையின் வீர மாமன்னர் மருது பாண்டியர்கள் தன்னை நம்பி வந்த நண்பனுக்காகவும் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் தன்னுயிர் நீத்த வீர வேங்கைகள் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் நாட்டையும் நாட்டு மக்களையும் இழந்து இரத்த சரித்திரம் உருவான நாள்...!!! 

இந்த சரித்திர படம் மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்களால் அக்டோபர் 24 திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் இன்று வெளியிடப்பட்டது...!!! 


Monday, 23 October 2017

அக்டோபர் 24 திருப்பத்தூரில் அரசு விழா


அக்டோபர் 24 27 மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 216 வது குருபூஜை முன்னிட்டு மருது வரலாறு மீட்புகுழு சார்பில் அடிக்கப்பட்ட போஸ்டர்...!!!

Sunday, 15 October 2017

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பெற்ற சாபம்




மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பெற்ற சாபம் பற்றியும் சித்தர் நாராயண யோகீஸ்வரர் பற்றியும் இந்த பதிவில் காண்போம்...!!!

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் கட்டிய காளையார் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்படுகிறது இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார் அவர் பெயர் #நாராயண #யோகீஸ்வர் ஆகும் 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தைக் கண்டனர் நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும் வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது ஆனால் மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் #மாமிசத் #துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும் பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம் அதிர்ச்சி அடைந்து இந்த செய்தியை மருதரசர்களிடம்  தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் #தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் இதனை கேட்ட மருதரசர்கள் ஆச்சரியம் அடைந்து சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்...!!!

மாமன்னர் மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்ட பின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு மாமிசம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர் மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார் அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கூற அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார்...!!!

அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார் அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்ற வேண்டும் இதன்படி ஓர் ஒற்றர் #ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார் அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார் அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர் அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர்...!!!

தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு #சாபம் இட்டார் அதன்படி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும் யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மாமன்னர் மருது பாண்டியர்கள் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் அடைந்தார்கள்...!!!

சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் மருது பாண்டியர்களால் அமைக்கப்பட்டது இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளீஸ்வரர் கோவிலில் நாராயண யோகீஸ்வரர் சித்தரின் ஜீவசமாதி பேணப்பட்டு வருகிறது...!!!

மருது வரலாறு மீட்பு குழு 

Saturday, 7 October 2017

1957 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் மருதரசர்கள் நினைவிடம்



1957 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது எடுத்து படம்...!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

Friday, 6 October 2017

திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்



நமது நிகழ்கால வரலாற்றில் கூட திருப்பத்தூர் பற்றிய பல வரலாறுகள் மறைக்கப்பட்டு தான் வருகிறது 21.10.1985 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் குருபூஜை வேலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் 2 அடி ஆழத்தில் மண்ணை தோண்டிய போது நாம் படத்தில் காணும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது இது 1 அடி உயரம் உடையது மேலும் இது 18 ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம் ஆகும்...!!!

அக்காலத்தில் மன்னர்களுக்கும் வீராதி வீரர்களும் வீரமரணம் அடைந்தால் அவரை புதைக்கும் போது சமாதியில் சிவலிங்கம் வைப்பது வழக்கம் இதனை பல்லிபடை கோவில் என்று கூறுவார்கள் அது போல மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வாரிசுகளால் வைக்கப்பட்ட சிவலிங்கமே இது மேலும் 1985 முதல் இன்று வரை அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் மருதரசர்கள் தூக்கிலிடப்பட்ட தினத்தில் அவரது நேரடி வாரிசுதார்கள் காலை பொங்கல் வைத்து சாமி கும்பிடும் வழக்கம் உள்ளது அப்போது இந்த சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்...!!!

இன்றளவும் திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் இந்த சிவலிங்கம் காட்சி தருகிறது #மருது

இவன் மருது வரலாறு மீட்பு குழு

திருப்பத்தூர் மருதரசர்கள் நினைவிடத்தில் பர்மா பத்திரிகை ஆசிரியர்கள்



1958 ஆம் ஆண்டு பர்மாவில் உள்ள தமிழக பத்திரிக்கை ஆசிரியர்கள் தமிழகத்திற்கு வந்திருந்த சமயம் மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருப்பத்தூர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தும் போது எடுத்த படம்...!!!

இடம் : மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் திருப்பத்தூர்

இவன் மருது வரலாறு மீட்பு குழு

Wednesday, 4 October 2017

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் தந்தை வழி குலசாமி மருதாருடைய அய்யனார்




நாம் வெகு நாட்களாக தேடி வந்த மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குலதெய்வமாக ஆவியூர் வட்டம் மருதங்குடி கிராமத்தில் உள்ள #மருதாருடைய #அய்யனாரை குறிப்பிட்டுள்ளார்கள்...!

மணிமன்ற அடிகள் இயற்றிய
மாமன்னர் மருது பாண்டியர்கள் வரலாற்றுக் கும்மி என்ற புத்தகத்தில் இந்த தகவல் உள்ளது மேலும் கூடிய விரைவில் களம் சென்று ஆலயம் பற்றிய முழு வரலாற்றை சேகரித்து பதிவிடப்படும் ...!

தகவல் உதவி Venkatesh Ogun

இவன் மருது வரலாறு மீட்பு குழு

திருப்பத்தூர் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அரசு விழா


1995 இல் மருது சீமை (சிவகங்கை) மாவட்ட ஆட்சியர் உயர்திரு சண்முகம் அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அக்டோபர் 24 அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டபோது எடுத்த படம்...!

இடம் : மாமன்னர்கள் மருது பாண்டியர்களை அடக்கம் செய்யப்பட்ட நினைவு மண்டபம் திருப்பத்தூர்...!

இவன் மருது வரலாறு மீட்பு குழு