Saturday, 30 September 2017

திருமங்கலம் ஐயா மாமாயாண்டி சேர்வை


போர்க்குடி அகமுடையார் சமுதாயத்திற்காக 1975 ஆம் ஆண்டு மதுரையில் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக சமுதாய தொண்டாற்றியவர் ஐயா திருமங்கலம் எம்.ஆர்.மாயாண்டி சேர்வை இவர் "அகில இந்திய அகமுடையார் மகாசபை" அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் சிறப்பாக தனது ஆயுள் உள்ளவரை செயலாற்றினார் மேலும் இந்து மகாசபையின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார் இவர் மிக சிறந்த ஓவியரும் ஆவர் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திருவுருவ படத்தை சிம்மாசனத்தில் உள்ளவாறு முதன்முதலில் வரைந்தவர் இவரே...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

Thursday, 28 September 2017

அகம்படி காவல் பணியை மேற்கொண்ட தஞ்சை மண்ணின் மைந்தன் பெரியகோட்டை மன்னப்ப தேவர் அகமுடையார்



தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் இதன் எல்லையை ஒட்டியுள்ள திருவாரூர் மாவட்டத்தின் பல ஊர்கள் கோட்டை என்ற பெயரில் தான் முடிகிறது இங்கு #தேவர் பட்டம் கொண்ட கோட்டைபற்று அகமுடையார்களே அதிகம் வசிக்கின்றார்கள் சில நூறு ஆண்டுகளுகு முன்பு சோழர்களின் ஆட்சிக்கு பிறகு மராட்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் தஞ்சை பகுதி அரசர்களின் கோட்டை கொத்தளங்களை காவல் காக்கும் தொழில் முறையை செய்து வந்ததாகவும் பின்னர் காலபோக்கில் தற்போது விவசாய தொழில் முறைக்கு மாறி வந்ததாகவும் அறிய முடிகிறது இந்த வகையில் இந்த ஊர்களை கட்டிகாக்கும் அதிகாரியாக பெரியகோட்டை என்ற ஊரை சேர்ந்த #மன்னப்பதேவர் அவர்கள் இருந்து வந்துள்ளார் மேலும் காவல் காக்கும் அதிகாரியாக இருந்த இவரை இன்றும் தெய்வமாக வணங்கியும் வருகிறார்கள் கோட்டைகளிலே பெரிய பெயர் பெற்று இருந்த பெரியகோட்டையின் மண்ணின் மைந்தராக இருந்து அரசர்களின் அதிகாரியாக இருந்த மன்னப்ப தேவருக்கு இந்த வம்சத்தின் வழி வந்த சந்ததியினரால் இன்று சிறப்பாக பெரியகோட்டை மண்ணில் சிலை வைத்து ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்து சிறப்பித்து இருக்கிறார்கள்...!!!

அகமுடையார் வழித்தோன்றல் மன்னப்பதேவர் பற்றிய வரலாற்று செய்திகள் மேலும் திரட்டி பதிவு செய்யப்படும் விரைவில்...!!!

தகவல் உதவி மா.புருசோத்தமன் சொக்கனாவூர்

இவன் மருது வரலாறு மீட்பு குழு

Saturday, 23 September 2017

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குலதெய்வமான தீப்பாஞ்சம்மன்



மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குலதெய்வம் வழிபாடு என்று பார்த்தால் மூன்று தெய்வங்களை கூற வேண்டும் முதலாவது மருது பாண்டியர்கள் தனது தெய்வமாக ஏற்றுக்கொண்ட #தீப்பாஞ்சம்மன் இரண்டாவதாக மருதிருவரின் தாய்வழி குலசாமி மூன்றாவதாக மருதிருவரின் தந்தைவழி குலசாமி ஆகும் இப்போது இந்த கட்டுரை மூலம் தீப்பாஞ்சம்மன் வரலாற்றை முழுமையாக காணலாம்...!!!

மருது பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் கள்வர் பயமின்றி மக்கள் இன்பமுடன் வாழ்ந்து வந்தனர் அதே சமயத்தில் மருது பாண்டியர்களின் ஆட்சியை கலைக்க சில கயவர்களால் பல சதி வேலைகள் செய்யப்பட்டது அதில் ஒன்று தான் மருதரசர் பிறந்த ஊரான நரிக்குடியில் நடந்த கொலை...!!!

புதிதாக திருமணம் ஆன இளம் தம்பதியினர் நரிக்குடியில் தங்கியிருக்கும் போது கயவர்களால் அந்த தம்பதியினரில் ஆண்மகன் கொல்லப்பட்டான் தனது கண் முன்பு தனது கணவர் கொலை செய்யப்பட்டதை பார்த்து தாங்க முடியாத அந்த பெண் நியாயம் கேட்க மருதரசரை தேடி சிவகங்கை சீமை சென்றால் அங்கு சென்று மருது பாண்டியர்களிடம் தனது கணவர் கொல்லப்பட்டதை கூறி நியாயம் கேட்டாள் கதறி அழுதாள் இதை கேட்ட மருதரசர் உடனே குதிரை ஏறி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார் தனது ஆட்சியில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததை எண்ணி வருந்தி நின்றார்கள் மருது பாண்டியர்கள்...!!!

பிறகு அந்த பெண்ணிடம் நீங்கள் எங்களுடன் சிவகங்கை வாருங்கள் காலம் முழுவதும் நாங்கள் ஆதரவு தருகிறோம் உன் உருவில் எனது மகளை பார்க்கிறேன் என்று கூறினார் பெரிய மருது பாண்டியர் ஆனால் அதை அந்த பெண் ஏற்கவில்லை தனது கணவருடன் சேர்ந்து உடன்கட்டை ஏறுவதாக கூறிவிட்டால் பிறகு அந்த ஆண்மகனின் இறுதி சடங்கு நடந்தது அந்த நெருப்பில் இந்த பெண்ணும் உடன்கட்டை ஏறினாள் அதன் பின்னால் இந்த பெண்ணே மருதரசரின் குலதெய்வம் ஆனாள்...!!!

அந்த பெண் உடன்கட்டை ஏறிய பின் அவள் கட்டியிருந்த பட்டு புடவை மற்றும் கருகமணி போன்ற பொருள்கள் மட்டும் நெருப்பில் எரியாமல் இருந்தது பெரிய மருது பாண்டியர் அந்த பொருள்களை எடுத்து ஒரு ஓலைப்பெட்டியில் அடைத்து சின்ன மருது பாண்டியரின் கையில் கொடுத்து இனி இந்த பத்தினி தெய்வம் (தீப்பாஞ்சம்மன்) தான் நமக்கு குலதெய்வம் பத்தினி வழிபாடு நமது பரம்பரை பண்பாடு என்று கூறினார் அன்று முதல் இன்று வரை அந்த ஓலைப்பெட்டியில் உள்ள பொருள்களை மாமன்னர்கள் மருது பாண்டியர்களும் அவர்களுக்கு பின்னர் வந்த வாரிசுகளும் பத்திரமாக பாதுகாத்து 216 வருடங்களாக பல வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்...!!!

சிவகங்கை சீமை எனும் பழைய திரைப்படத்தில் இந்த நிகழ்ச்சியை முழுமையாக காட்சிப்படுத்தி இருப்பார்கள் மேலும் ஓலைப்பெட்டியில் உள்ள பொருள்களையும் திறந்து காட்டி இருப்பார்கள் இன்று வரை தீப்பாஞ்சம்மனை தெய்வமாக அனைவரும் வழிபட்டு வருகின்றனர்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு

Tuesday, 19 September 2017

இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் முதலாக ராக்கெட் குண்டுகள்



இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் முறையாக வெள்ளையனை எதிர்த்து மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திய தினம் இன்று (25.07.1801) அக்காலத்தில் ராக்கெட் குண்டு பயன்படுத்தும் அளவுக்கு எந்த பாளையக்காரரும் வளர்ந்து இருக்கவில்லை அனைவரும் வேல்கம்பு வீச்சருவா வச்சிட்டு போர் செய்த காலத்தில் ராக்கெட் குண்டுகளை பயன்படுத்திவர்கள் மருது பாண்டியர்கள் மட்டுமே மேலும் ஆங்கிலேய இராணுவ தளபதி கர்னல் வேல்ஸ் தனது நாட்குறிப்பில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்...!!!

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தொடுத்த ராக்கெட் குண்டுகளால் வெள்ளையனின் போர் படையில் ஒரு சிப்பாயின் உடல் நெருப்பில் எறியப்பட்டது வெள்ளையர்களால் அவனது உடலில் இருந்து ராக்கெட்டை பிரித்து எடுக்கவும் முடியவில்லை நெருப்பை அணைக்கவும் முடியவில்லை அக்காலத்திலே ராக்கெட் குண்டுகளை பயன்படுத்துவது என்பது ஆச்சரியமான விஷயம் தான்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

மருதிருவரால் சாபம் பெற்ற சிவகங்கை அதப்படக்கி கிராமம்



மருது வரலாறு மீட்புகுழு இளைஞர்களின் ஒரு சிறிய வரலாற்று தேடல் இது முழுமையாக படியுங்கள்...!

மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெள்ளையர்களுடன் சிவகங்கை சீமையில் போர் செய்யும் வேலையில் சிவகங்கை அருகே #அதப்படக்கி என்ற கிராமத்தின் வழியே உடல் சோர்வுடன் கடுமையான தண்ணீர் தாகத்துடன் வருகிறார்கள் அந்த நேரத்தில் அதப்படக்கி கிராமத்தில் ஒரு தம்பதியினர் (கணவன் மனைவி) வயலில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள் மருது பாண்டியர்கள் ஆனா அந்த தம்பதியினர் தண்ணீர் தர மறுத்து விட்டார்கள் மனிதனுக்கு மனிதன் குடிக்க தண்ணீர் தர கூட மறுக்கிறார்கள் என்ற கோபத்தில் மருது பாண்டியர்கள் அந்த தம்பதியினரை பார்த்து '' இனி உங்கள் குடும்பத்திற்கு ஆண் வாரிசு இருக்காது '' என்று சாபம் தந்து அவரது அருகே உள்ள ஒரு கருங்கல்லை எட்டி உதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்து சென்றுவிட்டனர்...!!!

மருது பாண்டியர்கள் அந்த தம்பதியினருக்கு அளித்த சாபத்தின் விளைவாக இன்று வரை 216 ஆண்டுகளாக அந்த குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு கூட பிறக்கவில்லை பலருக்கு வாரிசுகள் இல்லாமல் போய் விட்டது மேலும் மருது பாண்டியர்கள் எட்டி உதைத்த கல்லை இன்று வரை யாரும் அவ்வளவு எளிதில் நகர்த்த முடியவில்லை தற்போது அந்த கல் ஒரு ஊரணியில் உள்ளது அதனை சில காலம் முன்பு வரை அதப்படக்கி கிராம மக்கள் வழிபட்டு வந்து உள்ளார்கள் தற்போது அந்த கல் ஊரணி உள்ளே மறைந்து கிடக்கிறது விரைவில் மருது வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மூலம் அந்த கல்லை மீட்டு எடுத்து ஒரு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

Monday, 18 September 2017

மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கும் சிவகங்கை கொம்புக்காரனேந்தல் கிராமத்துக்கும் உள்ள தொடர்பு


மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் (அப்பாவை பெற்ற தாய்) அப்பத்தாவின் ஊர் தான் கொம்புக்காரனேந்தல் என்ற ஊர் இது சிவகங்கை சீமையில் அமைந்துள்ளது இந்த ஊர் மருதிருவரின் அப்பத்தா ஊர் என்று அறிந்த பலருக்கு மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மூத்த மனைவி பட்டத்தரசி  இராக்காத்தாள் அம்மா அவர்களின் ஊரும் இது தான் என்று தெரியாது அதை பற்றி இந்த பதிவில் காண்போம்...!

கொம்புக்காரனேந்தல் மாமன்னர் மருது பாண்டியர்களின் அப்பத்தா ஊராகும் அந்த வகையில் உறவினரான இவ்வூரை சேர்ந்த பெரியதனக்காரரின் மகளான இராக்காத்தாளை பெரிய மருது பாண்டியர் மணந்து கொண்டார்...!

ஒரு முறை பெரிய மருது பாண்டியர் கொம்புக்காரனேந்தலுக்கு வந்திருந்தார் இது அவருக்கு தந்தை வழி பாட்டியின் ஊர் என்பதால் கொம்புக்காரனேந்தல் மக்கள் மருதிருவரின் அளவற்ற அன்பும் உரிமையும் கொண்டாடி ''கொம்புக்காரனேந்தல் மருது பாண்டியன்'' என்று பெருமிதத்துடன் நாட்டுப்பாடல் பாடியுள்ளனர் அந்த பாடலின் வரிகள் இதோ...!

''வம்புக் காரர்கள் அத்தனை பேரையும்
வம்பு மரத்திலே சேர்த்தடிக்கும்
கொம்புக்கா ரனேந்தல் மருது பாண்டியன்
கொலுச் சிங்காரத்தைப் பாருங்கடி''

கொம்புக்காரனேந்தல் ஊரைச் சேர்ந்த இராக்காத்தாளை பெரிய மருது பாண்டியர் மணந்த பிறகு இராக்காத்தாள் மூலம் பிறந்த குழந்தைகள்...!

1.குடைக்காதுடையார்
2.முத்துச்சாமி
3.உடையணன்
4.முள்ளிக்குட்டி சாமி

குடைக்காதுடையார் 1794 ல் பரமக்குடி போரில் கொல்லப்பட்டார் மேலும் முத்துச்சாமி 1801 விடுதலை போர் தொடங்குவதற்கு முன்னரே இயற்கை மரணம் அடைந்தார் இவரது வாரிசுகள் சிவகங்கைக்கும் மானாமதுரைக்கும் இடையேயுள்ள நெடுங்குளம் புகைவண்டி நிலையம் அருகே உள்ள வேம்பங்குடியில் இன்றும் வசித்து வருகின்றனர் இவ்வூரை சேர்ந்த திரு. ராமச்சந்திரன் சேர்வையிடம் ஒரு செப்பேடும் ''பெரிய மருது'' என எழுதப்பட்ட 7 1/2 (ஏழரை) அங்குல நீளக்கத்தி ஒன்றும் தந்தத்தால் கைப்பிடி உள்ள எழுத்தாணி ஒன்றும் உள்ளன இராக்காத்தாள் அவர்களின் மூன்றாவது மகன் உடையணனும் நான்காவது மகன் முள்ளிக்குட்டிசாமியும் 1801 ல் நிகழ்ந்த விடுதலைப்போரில் பங்கெடுத்தமைக்காக ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர்...!!!

படத்தில் காண்பது மருது சீமையிலே கொம்புக்காரனேந்தல் மக்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் நினைவாக வைத்திருக்கும் நினைவு கல்...!!!

Sunday, 17 September 2017

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிறுவயலில் மக்களுடன் அமர்ந்து பேசிய கல் திண்ணை



மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் அரண்மனை சிறுவயலில் தங்கியிருந்த காலங்களில் அவரது ஓய்வு நேரத்தில் கல் திண்ணையில் மக்களுடன் மக்களாக அமர்ந்து அவர்களுடன் பேசுவார் சில காலங்களுக்கு பிறகு ஆங்கிலேய எதிரிகள் அதிகமாக இருந்த காலத்தில் மாமன்னர் பெரிய மருது பாண்டியரும் சில நாட்கள் அரண்மனை சிறுவயலில் தங்கியிருந்தார்...!

அப்போது ஒரு நாள் மேல தாளத்துடன் அரண்மனை அருகே ஒரு ஊர்வலம் வந்தது அதனை இந்த கல் திண்ணையில் மக்களுடன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரிய மருது பாண்டியர் ''விதி மேல தாளத்துடன் என்னை தேடி வருகிறது'' என்று கூறினார்...!

பல ஆண்டுகளாக சிறுவயலில் உடைந்து கிடந்த கல் திண்ணையின் ஒரு சிறு துண்டு தான் இது இதனை இன்று வரை வீட்டில் பத்திரமாக வைத்து பாதுகாத்து வருகிறார்கள் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அகமுடையாரின் நேரடி வாரிசுதார்கள் மேலும் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் இது...!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெட்டிய பாண்டியன் கிணறு



மருது சீமை (சிவகங்கை) யில் உள்ள #வீரவளசை என்ற ஊருக்கும் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கும் உண்டான தொடர்பை இக்கட்டுரையின் மூலம் காண்போம்...! 

நீங்கள் படத்தில் காண்பது சிவகங்கையில் வீரவளசை என்ற கிராமத்தில் அமைந்துள்ள #பாண்டியன் #கிணறு ஆகும் இதனை மாமன்னர் மருது பாண்டியர்கள் வெட்டியதால் இதற்கு பாண்டியன் கிணறு என்று பெயர் வந்தது அக்காலத்தில் வீரவளசை வீவீரர்களுக்கும் மேலும் இந்த ஊரின் நலனுக்காக மருது பாண்டியர்கள் வெட்டிய இந்த கிணற்றை இந்த வீரவளசை ஊர் மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் வருடம் வருடம் முளைப்பாரி எடுத்து பூதிருவிழா எடுத்து இந்த கிணற்றை தெய்வமாக வணங்கி வருகிறார்கள் 216 ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் இந்த கிணறு உபயோகத்தில் தான் உள்ளது...! 

இவையெல்லாம் நமது வரலாற்றை உலகிற்கு எடுத்து சொல்லும் வரலாற்று சின்னங்கள் ஆகும் இன்றளவும் அந்த கிணற்றை சுத்தம் செய்து சீறும் சிறப்புமாக பாதுகாத்து வரும் வீரவளசை கிராம மக்களுக்கு மருது வரலாறு மீட்பு குழு சார்பில் நன்றி கலந்த வாழ்த்துகள்...! 

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

வெள்ளையனை எட்டு முறை அடித்து விரட்டிய சிவகங்கை வீரவளசை கிராமம்


மருது சீமை (சிவகங்கையில்) வீரவளசை  என்ற ஒரு கிராமம் உள்ளது இதன் உண்மையான பெயர் #வீரர் #வளசை ஆகும் காலப்போக்கில் வீரவளசை  என்று அழைக்கப்படுகிறது இந்த ஊருக்கு வீரர் வளசை  என்று பெயர் வர காரணம் மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில் வெள்ளையனை எதிர்த்து போரிட அதிக அளவில் வீரர்கள் இந்த ஊரில் இருந்தனர் அவர்கள் குடிநீர் வசதிக்காக இங்கு மாமன்னர் மருது பாண்டியர்கள் ஒரு கிணறு வெட்டியுள்ளார்கள் அது #பாண்டியன் #கிணறு என்று அழைக்கப்படுகிறது இ‌ன்றைய காலத்தில் வீரவளசை  மக்கள் அந்த கிணற்றை மந்தை சாமி என்று வணங்கி வருகிறார்கள் வருடம் வருடம் முளைப்பாரி எடுத்து பூதிருவிழா எடுத்து வணங்கி வருகிறார்கள் மேலும் இன்று வரை பாண்டியன் கிணறு மக்களின் உபயோகத்தில் தான் உள்ளது...!!!

தொண்டி - திருப்புவனம் சாலை ஒரே நேர் சாலையாக இருந்துள்ளது இந்த சாலை அக்காலத்தில் ''எட்டாம் நம்பர் சாலை'' என்று அழைக்கப்பட்டுள்ளது அதற்கு காரணம் என்னவென்றால் வெள்ளையர்களின் போர் படையை எட்டு முறை அடித்து விரட்டி வெற்றி கொடி ஏற்றியுள்ளார்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் பிறகு ஒன்பதாவது முறை ''காளையார் கோவில் கோபுரத்தை பீரங்கி வைத்து தகர்த்து விடுவோம்'' என்று கூறி துரோகத்தால் நமது சிவகங்கை படையை வலைத்து பிடித்தனர் ஆங்கிலேயர்கள் நூற்றுக்கணக்கான போர் வீரர்களை ஒரே இடத்தில் வலைத்து பிடித்த ஊர் தான் வீரர் வளசை அதனாலே இந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது...!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

பெரியகோட்டை பள்ளிவாசலுக்கு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அளித்த மானியம்


இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அளித்த மானியம் பற்றி இந்த பதிவில் காணலாம்...!!!

மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மதநல்லினக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மேலமேலு  216 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மக்களுக்கு கோவிலும் கிருஸ்துவ மக்களுக்கு தேவாலயமும் முஸ்லீம் மக்களுக்கு பள்ளிவாசல் பல கட்டிக்கொடுத்து மதநல்லினக்கத்தை ஏற்படுத்தி மருது சீமையினை சீறும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தனர் மேலும் பல கோவில்களுக்கு பல ஊர்களை மானியமாக வழங்கினார்கள் அதில் ஒன்று தான் சிவகங்கை #பெரிய #கோட்டை #பள்ளிவாசல்...!!!

சிவகங்கையில் பெரிய கோட்டை என்ற ஊர் உள்ளது இங்கு #நல்ல #முகமது என்ற இஸ்லாமிய ஞானி வாழ்ந்து வந்தார் அவரது மறைவுக்கு பின் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ''நல்ல முகமது ஒலியுல்லா'' என்ற பள்ளிவாசலுக்கு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் #எறும்புகுடி என்ற ஊரை மானியமாக வழங்கினார்கள் இன்று வரை பெரிய கோட்டை பள்ளிவாசல் திருவிழாவிற்கு எறும்புகுடியில் இருந்து மானியமாக பொருள்கள் அளிக்கிறார்கள்...!!! #மருது

இவன் மருது வரலாறு மீட்பு குழு