மருது சீமை (சிவகங்கையில்) வீரவளசை என்ற ஒரு கிராமம் உள்ளது இதன் உண்மையான பெயர் #வீரர் #வளசை ஆகும் காலப்போக்கில் வீரவளசை என்று அழைக்கப்படுகிறது இந்த ஊருக்கு வீரர் வளசை என்று பெயர் வர காரணம் மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில் வெள்ளையனை எதிர்த்து போரிட அதிக அளவில் வீரர்கள் இந்த ஊரில் இருந்தனர் அவர்கள் குடிநீர் வசதிக்காக இங்கு மாமன்னர் மருது பாண்டியர்கள் ஒரு கிணறு வெட்டியுள்ளார்கள் அது #பாண்டியன் #கிணறு என்று அழைக்கப்படுகிறது இன்றைய காலத்தில் வீரவளசை மக்கள் அந்த கிணற்றை மந்தை சாமி என்று வணங்கி வருகிறார்கள் வருடம் வருடம் முளைப்பாரி எடுத்து பூதிருவிழா எடுத்து வணங்கி வருகிறார்கள் மேலும் இன்று வரை பாண்டியன் கிணறு மக்களின் உபயோகத்தில் தான் உள்ளது...!!!
தொண்டி - திருப்புவனம் சாலை ஒரே நேர் சாலையாக இருந்துள்ளது இந்த சாலை அக்காலத்தில் ''எட்டாம் நம்பர் சாலை'' என்று அழைக்கப்பட்டுள்ளது அதற்கு காரணம் என்னவென்றால் வெள்ளையர்களின் போர் படையை எட்டு முறை அடித்து விரட்டி வெற்றி கொடி ஏற்றியுள்ளார்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் பிறகு ஒன்பதாவது முறை ''காளையார் கோவில் கோபுரத்தை பீரங்கி வைத்து தகர்த்து விடுவோம்'' என்று கூறி துரோகத்தால் நமது சிவகங்கை படையை வலைத்து பிடித்தனர் ஆங்கிலேயர்கள் நூற்றுக்கணக்கான போர் வீரர்களை ஒரே இடத்தில் வலைத்து பிடித்த ஊர் தான் வீரர் வளசை அதனாலே இந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது...!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment