மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குலதெய்வம் வழிபாடு என்று பார்த்தால் மூன்று தெய்வங்களை கூற வேண்டும் முதலாவது மருது பாண்டியர்கள் தனது தெய்வமாக ஏற்றுக்கொண்ட #தீப்பாஞ்சம்மன் இரண்டாவதாக மருதிருவரின் தாய்வழி குலசாமி மூன்றாவதாக மருதிருவரின் தந்தைவழி குலசாமி ஆகும் இப்போது இந்த கட்டுரை மூலம் தீப்பாஞ்சம்மன் வரலாற்றை முழுமையாக காணலாம்...!!!
மருது பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் கள்வர் பயமின்றி மக்கள் இன்பமுடன் வாழ்ந்து வந்தனர் அதே சமயத்தில் மருது பாண்டியர்களின் ஆட்சியை கலைக்க சில கயவர்களால் பல சதி வேலைகள் செய்யப்பட்டது அதில் ஒன்று தான் மருதரசர் பிறந்த ஊரான நரிக்குடியில் நடந்த கொலை...!!!
புதிதாக திருமணம் ஆன இளம் தம்பதியினர் நரிக்குடியில் தங்கியிருக்கும் போது கயவர்களால் அந்த தம்பதியினரில் ஆண்மகன் கொல்லப்பட்டான் தனது கண் முன்பு தனது கணவர் கொலை செய்யப்பட்டதை பார்த்து தாங்க முடியாத அந்த பெண் நியாயம் கேட்க மருதரசரை தேடி சிவகங்கை சீமை சென்றால் அங்கு சென்று மருது பாண்டியர்களிடம் தனது கணவர் கொல்லப்பட்டதை கூறி நியாயம் கேட்டாள் கதறி அழுதாள் இதை கேட்ட மருதரசர் உடனே குதிரை ஏறி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார் தனது ஆட்சியில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததை எண்ணி வருந்தி நின்றார்கள் மருது பாண்டியர்கள்...!!!
பிறகு அந்த பெண்ணிடம் நீங்கள் எங்களுடன் சிவகங்கை வாருங்கள் காலம் முழுவதும் நாங்கள் ஆதரவு தருகிறோம் உன் உருவில் எனது மகளை பார்க்கிறேன் என்று கூறினார் பெரிய மருது பாண்டியர் ஆனால் அதை அந்த பெண் ஏற்கவில்லை தனது கணவருடன் சேர்ந்து உடன்கட்டை ஏறுவதாக கூறிவிட்டால் பிறகு அந்த ஆண்மகனின் இறுதி சடங்கு நடந்தது அந்த நெருப்பில் இந்த பெண்ணும் உடன்கட்டை ஏறினாள் அதன் பின்னால் இந்த பெண்ணே மருதரசரின் குலதெய்வம் ஆனாள்...!!!
அந்த பெண் உடன்கட்டை ஏறிய பின் அவள் கட்டியிருந்த பட்டு புடவை மற்றும் கருகமணி போன்ற பொருள்கள் மட்டும் நெருப்பில் எரியாமல் இருந்தது பெரிய மருது பாண்டியர் அந்த பொருள்களை எடுத்து ஒரு ஓலைப்பெட்டியில் அடைத்து சின்ன மருது பாண்டியரின் கையில் கொடுத்து இனி இந்த பத்தினி தெய்வம் (தீப்பாஞ்சம்மன்) தான் நமக்கு குலதெய்வம் பத்தினி வழிபாடு நமது பரம்பரை பண்பாடு என்று கூறினார் அன்று முதல் இன்று வரை அந்த ஓலைப்பெட்டியில் உள்ள பொருள்களை மாமன்னர்கள் மருது பாண்டியர்களும் அவர்களுக்கு பின்னர் வந்த வாரிசுகளும் பத்திரமாக பாதுகாத்து 216 வருடங்களாக பல வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்...!!!
சிவகங்கை சீமை எனும் பழைய திரைப்படத்தில் இந்த நிகழ்ச்சியை முழுமையாக காட்சிப்படுத்தி இருப்பார்கள் மேலும் ஓலைப்பெட்டியில் உள்ள பொருள்களையும் திறந்து காட்டி இருப்பார்கள் இன்று வரை தீப்பாஞ்சம்மனை தெய்வமாக அனைவரும் வழிபட்டு வருகின்றனர்...!!!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment