இன்றைய இராமநாதபுரம் சேதுபதி சீமையை ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் (1672-1710) வரை சிறப்பாக ஆட்சி செய்தார் அவருக்கு உறுதுணையாகவும் படை வீரராகவும் நிர்வாகியாகவும் இருந்தவர் தான் இளமனூர் சோளகை சேர்வைக்காரர்...!
இவர் மதுரை இளமனூரை பூர்வீகமாக கொண்டு விசுவநாத நாயக்கருக்கு தளபதியாக இருந்து வந்தவர் அப்போது நாயக்க மன்னர் சோளகை சேர்வைக்காரரின் தங்கையை பெண் கேட்டார் அதனை மறுத்த சேர்வைக்காரர் தங்கையின் உருவ பொம்மையை செய்து விளக்கை ஏற்றி வைத்து விட்டு இராமநாதபுரம் சீமைக்கு தனது குடும்பத்தினருடன் வந்து விட்டார் பின்னர் கிழவன் சேதுபதிக்கு தளவாயாக பொறுப்பேற்றதால் அவர் தானம் கொடுத்த ஊர் இளமனூர் ஆகும்...!
பணம் புகழுக்கு ஆசைப்படவில்லை சோளகை சேர்வைக்காரர் அதனால் தான் நாயக்க மன்னர் பெண் கேட்டும் அதனை மறுத்துவிட்டார் இன்று வரை இளமனூரில் சோளகை சேர்வைக்காரர் வாரிசுகள் உள்ளனர் படத்தில் உள்ள பலகை இளமனூர் உறவுகளால் வைக்கப்பட்டது ஆகும்...!
இன்று வரை இளமனூர் பெருங்களூர் வைரவனேந்தல் கிராமங்களில் நான்கு கிளை வம்சத்தினராய் சோளகை சேர்வைக்காரர் வாரிசுகள் உள்ளனர் தலையே போனாலும் சகோதரி மகளை மணம் கொள்ளாதவர்களாய்.
ReplyDeleteகிளைகள் உள்ள அகமுடையார்கள்.